முதலீட்டுக்கு பங்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?

முதலீட்டுக்கு பங்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?


ஒரு பங்கை எப்படித் தேர்ந்தெடுப்பது... அந்தப் பங்குக்கு இந்த விலை சரிதானானு எப்படித் தெரிஞ்சுக்கறதுனு ஒரு சந்தேகம் வரும். சந்தையில வர்த்தகம் ஆகிக்கிட்டிருக்கும் பங்குன்னா அதோட செயல்பாட்டை வெச்சு தெரிஞ்சுக்கலாம். ஆனா புதுசா வெளியாகும் ஐ.பி.ஓ. நல்லதானு எப்படி தெரிஞ்சுக்கறது?

முதல்ல, இப்போ எந்த கம்பெனியுமே முகமதிப்புல பங்கு வெளியிடுறது இல்லை. அதாவது, பங்கின் மதிப்பு பத்து ரூபாய்தான். ஆனா, 'என் கம்பெனிக்கு நல்ல பேர் இருக்கு... நல்ல திறமை இருக்கு... அதனால், நான் இத்தனை ரூபாய் பிரீமியத்தில்தான் தருவேன்'னு சொல்லி கம்பெனிகள் பிரீமியத்தில்தான் விலை நிர்ணயம் செய்கின்றன.

ஒரு பங்கோட விலை இவ்வளவு ரூபாய்ன்னு நிர்ணயிக்க பல காரணிகள் இருக்கு. பங்கு வெளியிடுற நிறுவனம் எந்த அளவுக்கு லாபத்துல இயங்குது, எவ்வளவு சொத்து இருக்கு, அந்த நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கு, எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்..

இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் அடிப்படையா வச்சுதான் ஒரு நிறுவனத்தோட பங்கு விலை தீர்மானிக்கப்படுது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனமும், மெர்ச்சென்ட் பேங்க்கர்ஸ் நிறுவனமும் சேர்ந்து முடிவு செய்யும்.

இப்படி கூடுதலா வச்சு விற்கப்படுற தொகைக்கு பிரீ-மியம்னு பேர். உதாரணமா, 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட ஒரு பங்கை 300 ரூபாய்க்கு ஒரு கம்பெனி விற்குதுன்னா, இதுல பிரீமியம் 290 ரூபாய். அதாவது பங்கோட விலையிலேர்ந்து, அதோட முகமதிப்பை கழிச்சா கிடைக்கிறதுதான் பிரீமியம்.

இப்போ இந்த அடிப்படை விஷயங்களை நாமளே தெரிஞ்சு முடிவெடுக்க முடியுமா...? எது நல்ல ஐ.பி.ஓ-னு எப்படித் தெரிஞ்சுக்கறது. இதுக்கு சில விஷயங்களைக் கவனிக்கணும். அந்த கம்பெனியை நடத்துறவங்களோட நம்பகத் தன்மை, நிறுவனத்தோட கடந்தகால செயல்-பாடுகள், அந்த நிறுவனம் தயாரிக்கிற பொருட்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கு, அந்த நிறுவனம் சார்ந்திருக்கிற துறை வருங்காலத்துல வளர்ச்சி அடையுமா.. இப்படி சில விஷயங்களை கணக்குப் பண்ணிப் பார்க்கணும்.