தொழில் முனைவோருக்குத் தேவையான 8 தகுதிகள்!

தொழில் முனைவோருக்குத் தேவையான 8 தகுதிகள்!


ஒரு சாதாரண சேல்ஸ்மேனில் துவங்கி வங்கி மேலாளர், ஹோட்டல் நிறுவனர், தொழில் முனைவோர் என எவ்வித நிலையில் இருந்தாலும் அவர்களுக்கான முக்கியமான  விஷயங்கள் இருக்கும். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் போது வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். மற்ற வேலைகளில் இருப்பவர்களை விடச் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் கட்டாயம் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். அவை என்ன  என்பதை பார்ப்போம்.

1.திட்டமிடல்!

சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் என்ன வேலை உள்ளது, அந்த வேலைகளில் எதைக் கட்டாயம் முடிக்க வேண்டும், எந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அட்டவணைப்படுத்திக் கொள்வது அவசியம். அதாவது தன்னுடைய வேலைகளை டைரியில் அல்லது  கேட்ஜட்களில் அதில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

2. கருவிகள்

இன்றைய சூழ்நிலையில் அனைத்து வேலைகளையுமே வேகமாக முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீங்கள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால்கூடிய வெற்றி வாய்ப்பு உங்களின் கையை விட்டுப் போகக்கூடிய வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலுக்குத் தேவையான கருவிகளை எப்போதுமே வைத்திருப்பது நல்லது. அதாவது லேப்டாப், செல்போன், சேல்ஸ் கிட் என தேவையானவற்றை நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டும்.


3. உடை!

சொந்தமாகத் தொழில் செய்யும் போது பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எப்போதுமே அலுவலக உடையில் இருப்பது நல்லது. ஏனெனில் இதை வைத்தும் உங்களை மதிப்பீடுவர்கள். அதாவது உங்களுடைய நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரமால் இருப்பதால் இவர் எப்படிக் கொடுக்கும் வேலையில் கவனம் செலுத்துவர் என நினைக்கத் தோன்றும். தொழில் முனைவோர் கோட், சூட் வைத்துக்கொள்ள நல்லது. சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது இதை அணிவது சிறப்பு. மேலும் அதற்கேற்ப உங்களுடைய ஷூ, லெதர் பெல்ட் போன்றவை அணிவது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

4. பிசினஸ் கார்ட்ஸ்


நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரும் உங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் பிசினஸ் கார்ட் வழங்குவது முக்கியம். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் உங்களை எளிதாகத் தொடர்பு பிசினஸ் கார்ட் அவசியம் தேவை.பிசினஸ் கார்ட் என்பது வேறு ஒன்றும் இல்லை, விசிட்டிங் கார்ட்தான்.

5. கற்பனை திறன்!

ஒவ்வொரு தொழிலிலும் போட்டியார்கள் கட்டாயம் இருப்பார்கள். போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உங்களின் பொருட்களை முன்நிறுத்துவதற்குத் தேவையான புதிய ஐடியாகள் அவசியம் தேவை. தொழிலில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்தையில் உங்களின் பொருட்கள் தனி அடையாளத்துடன் தெரிவதற்கான வேலைகளைச் செய்வது அவசியம்.



6. விடாநம்பிக்கை

தொழிலில் நஷ்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நஷ்டம் ஏற்படும் போது நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அந்தச் சூழ்நிலையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் உங்களின் உற்பத்தி பொருளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். எனவே எப்போதுமே தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

7. எதிர் கால இலக்கு


தொழிலில் எப்போதுமே எதிர்கால இலக்குகளை வைத்திருக்க வேண்டும். அதாவது அடுத்த ஒருவருடத்தில் நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும். லாபம் எவ்வளவு இருக்க வேண்டும், உற்பத்தி அளவை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே இலக்குகளைத் தீர்மானிப்பது அவசியம். இலக்குகளை அதை நோக்கிய பயணச் செய்வது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.

8. சுய அறிவு..!


தொழில் குறித்து எடுக்கும் முடிவுகள் என்பது உங்களின் முடிவாக இருப்பது அவசியம். அதாவது நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உந்துதலின் பேரில் எந்தவிதமான முடிவையும் எடுக்கக் கூடாது.
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அந்த முடிவு சரியாக இருக்குமா, அதனால் எதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கவனித்து முடிவு எடுப்பது நல்லது.